• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கவிதை: பேரழகனே!

பேரழகனே..,

மழையோட மண் வாசம்
அனலாத்தான் அவன் பேச்சும்

கரையோட அலையடிச்சா
கனவோடு அவன் உருவம்

உன் பின்னே நான் வாறேன்
உலகறிந்த ஞானியாக

கையோடு கை கோர்க்க
கடவுளை நான் கேட்க

கண்ணோடு இமை மூட
மறுக்காதே எனை ஆள

வேப்பம் குச்சி உன் பல்லு குத்த
வெறுப்பாக அம் மரத்தை பார்க்க

காத்தடிச்சு அது சிரிக்க
கலங்கிடிச்சு என் மனசு

மலர்களின் வார்த்தை மெளனமடா
உன் மனதை மறைப்பது பாவமடா

ஆழ்கடலில் ஒரு முத்து நீ

உன்னை அணைத்து கொள்ள
மடி முத்தம் தாடா நீ

அடிக்கும் காற்று உன் நெற்றி முடி பறித்து கார் மழை கொண்டு வந்து நனைத்ததே எனை இன்று

தென்றலோடு கலந்தவனை
தேடி பார்க்கிறேன்

தேவன் மகனா நீ

ஓடி நடக்கிறேன் காதல் பிடியிலே

உனை அடைய தவம் இருக்கவா

இல்லை கவிதை எழுதி கம்பனுமாகவா
என் பேரழகனே

கவிஞர் மேகலைமணியன்