• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கவிதை: பேரழகனே!

பேரழகா..,

இன்னும் ஒரு
ஜனனத்தையே
நான் வேண்டுகிறேன் !

என் வாழ்வின்
நாட்குறிப்பு புத்தகத்தில் விட்டுப்போன பக்கங்களை எல்லாம்
உனை கொண்டு நிரப்ப !

சுகமோ அல்லது சோகமோ
உன் விரல் பற்றி
நடக்கும் நெடுந்தூர வேண்டுமடா

பள்ளம் மேடுகள் கடக்கையில்
“பார்த்துவா” எனும் உன்
கரிசனம் வேண்டுமடா

பாதி தூக்கத்தில்
உன் நெற்றி முத்தம்
நித்தம் வேண்டுமடா

இட்டு நிரப்ப ஏராள
பக்கங்கள் உண்டு !
ஏழ்பிறப்பும் தீராத
ஏக்கம் இருந்தாலும் !

இன்னும் ஒரு பிறவியாவது
எவரோடும் பகிரப்படாமல்
உனது நேசம்
எனக்கே எனக்காய் வேண்டுமடா
என் பேரழகனே
!

கவிஞர் மேகலைமணியன்