


அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தெரிவித்துக் கொண்ட அவர்,
பாரதிய ஜனதா மூன்று விதமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இருக்கிறது,

நேற்று மாநிலம் முழுவதும் எங்கெல்லாம் அம்பேத்கரின் சிலை இருக்கிறதோ, அங்கெல்லாம் அந்த இடத்தை தூய்மை செய்து அவருடைய படத்திற்கு முன்பாக தீப விளக்குகளால் அவரின் படம் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று ஒவ்வொரு பகுதிகளிலும், டாக்டர் அம்பேத்கரின் உருவப்படம் வைக்கப்பட்டு, பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களும் நிர்வாகிகளும், தொண்டர்களும் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இன்று பல்வேறு பகுதிகளில் அரசாங்கத்தினுடைய திட்டங்களில் உதவி கொடுப்பதும், நலத் திட்ட உதவிகள் வழங்குவது என்று இன்று நாள் முழுவதும், ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள் தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து கொண்டு இருக்கிறது. கோவை மாநகர் மாவட்ட தலைவரின் தலைமையில், மாநில துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளர் நந்தகுமார், பட்டியல் சமுதாய அணியின் மாநில பொதுச் செயலாளர் ரங்கராஜ், ஆகிய அனைவரும் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து உள்ளனர். 15 ஆம் தேதியில் இருந்து 20 ஆம் தேதிக்கு உள்ளாக ஏதாவது ஒரு நாள், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரங்க கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அரங்க கூட்டத்தில் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதை அம்பேத்கர் அவர்களை, காங்கிரஸ் கட்சி அவர் உயிரோடு இருந்த போது, அவரை எப்படி எல்லாம் அவமரியாதை செய்தது, துரோகம் செய்தது, அன்றைய பாரத பிரதமராக இருந்த நேரு, எப்படி எல்லாம் அவருடைய புகழை குறைக்க பார்த்தார்.
எப்படி அவருக்கு கவுரவம் கொடுக்கப்படாமல் இருந்தது என்பதை பற்றி எல்லாம், ஆனால் பாரதிய ஜனதா கட்சி அவர் பிறந்த இடம், அவர் படிக்க லண்டனில் சென்ற இடம், அவர் உயிர் நீத்த இடம், தீக்ஷா பூமி என்று அவர் புத்த மதத்திற்கு மாறிய இடம், இறுதியாக அவர் எரியூட்டப்பட்ட இடம், அவை ஐந்து இடங்களில் கோடீஸ் கணக்கான ரூபாய்களை செலவிட்டு என்று அவருக்கு மணிபண்டபம் அமைத்து அவருக்கு நினைவகம் அனைத்து அவருடைய புகழை உலக முழுவதும் எடுத்துச் செல்கின்ற கட்டியாக பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது. நரேந்திர மோடி டாக்டர் அம்பேத்காரருக்கு மரியாதை செய்ய வேண்டும், அவரை கௌரவம் படுத்த வேண்டும் என்பதற்காக நாட்டின் பண பரிமாற்ற செயலியை கூட பீம் ஆப் என்று பெயரிட்டார். அது இல்லாமல் டெல்லியிலே டாக்டர் அம்பேத்கர் பெயரிலேயே, அம்பேத்கர் பெயரில் பன்னாட்டு மையம் அமைக்க அடிகள் நாட்டப்பட்டு இருக்கிறது.
பாரத ரத்னா வழங்கப்பட்டது கூட பாரதியார் ஜனதா கட்சி கூட்டாட்சி ஆட்சியில் இருக்கும் போது தான். இட ஒதுக்கீட்டிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி எப்படி இருந்தது, போன்ற பல்வேறு தகவல்களை அந்த கருத்தரங்கிலே கட்சியினுடைய தொண்டர்களுக்கு எடுத்துக் கூற இருக்கிறோம். இவையில்லாமல் பட்டியல் இனத்தைச் சார்ந்த மிக முக்கியமான நபர்கள் தொழிலதிபர்கள் சமுதாயத்தினுடைய பல்வேறு தலைவர்கள் எல்லாம் அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட இருக்கிறார்கள். அந்தக் கருத்தரங்குக்கான ஏற்பாடுகள் நல்ல முறையிலே நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. நாடு முழுவதும் டாக்டர் அம்பேத்கரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில், அவர் இந்த நாட்டிற்கு கொடுத்து இருக்கும் பங்களிப்பை பற்றி எல்லாம் மிகச் சிறப்பான வகைகளை பாரதிய ஜனதா கட்சி நாட்டு மக்களுக்கு எடுத்து கூறிக் கொண்டு இருக்கிறது என்று கூறினார்.
கோவையின் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெயரிலே இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்றத்தில் முன் வைத்து நான் பேசி வருகிறேன், பல்வேறு அமைச்சர்கள் கோயம்புத்தூருக்கு இதை செய்தோம் அதை செய்தோம் என பதில் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் சாலைகளுக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறோம் என கூறுகிறார்கள். ஆனால் இருசக்கர வாகனத்தில் செல்போருக்கு தெரியும் கோவையில் சாலை எவ்வளவு பழுதான நிலையில் இருக்கிறது என்று. உடனடியாக பணிவை ஆரம்பிப்பதாக அரசு சொல்லுகிறது, தேர்தலுக்காக வேலை செய்யாமல் மக்களுக்காக பணி செய்ய வேண்டும் என்பதை எங்களுடைய வேண்டுகோளாக உள்ளது. இன்னும் கூட இந்த பகுதியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, என்னவெல்லாம் ஆக்கபூர்வமான முறைகளை மத்திய அரசின் வாயிலாகவும் மாநில அரசின் வாயிலாக என்னவெல்லாம் கொண்டு வர முடியுமோ, சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் அந்த பணிகளை நிச்சயம் செய்து கொண்டே இருப்பேன் என்று கூறினார்.
பாரதிய ஜனதாவின் புதிய மாநில தலைவர் வந்து இருக்கிறார், பழைய தலைவரின் செயல்பாடுக்கும் புதிய தலைவரின் செயல்பாடுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும், ? செயல்பாடு எப்படி ? இருக்கும் என்பது குறித்த கேள்விக்கு,
ஒருவருக்கு முதல் குழந்தை இருந்து இரண்டாவது குழந்தை பிறந்து இருக்கிறது என்றால், இன்னும் பிறந்து இருக்கும் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வரவில்லை அதற்குள் இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால் எப்படி ? கூற முடியும் என்று கூற முடியும். பாரதிய ஜனதா கட்சி ஜனநாயக ரீதியாக இயங்குகின்ற கட்சி. பேரன் பிறந்து விட்டான், கொள்ளு பேரன் பிறந்தான் எங்களுக்கு தலைவருக்கு பஞ்சமே இல்லை என்று சொல்லுகின்ற கட்சியை நாங்கள் அல்ல.
மாநிலத் தலைவர் ஆக அண்ணாமலை மிக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். கட்சி வேலைகளிலும் சரி தேர்தல் வேலைகளிலும் சரி மிக சிறப்பாகவே செயல்பட்டு, தனி முத்திரையை பதித்து இருக்கிறார். எங்களைப் பொறுத்த வரை எங்களுடைய கட்சியில் தலைமை பொறுப்பு என்பது, குழு முடிவு செய்யும் தலைமை செயல் படுத்துவார்கள் என்பதை மட்டும் தான் கொண்டு இயங்கிக் கொண்டு இருக்கிறோம். இன்று மாநில தலைவராக பொறுப்பேற்று இருக்கக் கூடிய நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க காலத்தில் சட்டப்பேரவை உறுப்பினராகவும் அமைச்சராகவும் நல்ல பங்களிப்பை கொடுத்தவர். புதிய நபர் கட்சிக்குள் வரும் போது, அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும், அவர் இன்று மாநில தலைவராக பொறுப்பேற்று இருப்பது மிகவும் நல்ல விஷயம். அவருடைய பணி சிறக்க நாங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்கவும், இணைந்து பணியாற்றவும் கட்சியினுடைய கோடிக் கணக்கான தொண்டர்கள் அவரின் பின்னால் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். நல்ல முறையில் அவர் எங்களை வழிநடத்துவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிச்சயம் இருக்கிறது என்று கூறினார்.
ஜனநாயக முறைப்படி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் என்று கூறுகிறீர்கள், மாணவர் காலத்தில் இருந்து நீங்கள் கட்சிகள் இருக்கிறீர்கள்.. ஆனால் அவர் வந்து 8 வருடத்திற்குள் மாநிலத் தலைவர் ஆகிவிட்டார்? நீண்ட காலமாக கட்சியில் உழைக்கக் கூடியவர்களுக்கு சரியான வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு ?
நீங்கள் மாநிலத் தலைவராக என்னை நினைத்து கேட்கிறீர்கள், ஆனால் இந்த கட்சி என்னை தேசிய தலைவராகவே ஆக்கி இருக்கிறது. அது ஏன் உங்களின் பார்வையில் படவில்லை. முதன் முதலாக தென்னிந்தியாவில் இருந்து இந்தி தெரியாத ஒரு பெண்மணியை, இன்று இந்த கட்சி தேசிய தலைவராக ஒரு பெண்மணிக்கு பொறுப்பு கொடுத்து இருக்கிறார்களே? அதுமட்டுமில்லாமல் மத்திய தேர்தல் குழுவிலே இருக்கின்ற அத்தனை மூத்த தலைவர்களோடு எனக்கும் ஒரு இடத்தை கொடுத்து அழகு வார்த்தை இருப்பது பாரதிய ஜனதா கட்சி தான். பாரதிய ஜனதா கட்சியில் பதவியே இல்லாமல் 30 வருடத்திற்கு மேல் உழைத்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். சரியான நேரத்தில் கட்சி அவர்களுக்கு பொறுப்பு கொடுக்கும். எங்களைப் பொறுத்தவரை, பதவி என்பதெல்லாம் மனதில் இல்லை பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வளர வேண்டும் என்பதில் தான் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார்.
மாநிலத் தலைவர் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லையா என்ற கேள்விக்கு?.

நான் பாரதிய ஜனதா கட்சியில் என்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கியதில் இருந்து ஒருபோதும் எனக்கு இந்த பதவி வேண்டும், அந்த பதவி வேண்டும் என கேட்டதே இல்லை?.. எந்த நேரத்தில் என்னிடம் எந்த வேலையை கொடுத்தால் சரியாக இருக்கும் என கட்சி நினைக்கிறதோ அதை நான் சரியாக ஏற்று நடத்துகிறேன்.. எனக்கு ஒரு போதும் வாய்ப்பை தவற விட்டோம் என்ற கவலையோ ?வருத்தமோ ? என்னிடம் ஒருபோதும் இருந்தது இல்லை என்று கூறினார்.
கட்சி வளர்ந்து கொண்டு இருக்கிறது என்பதை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. 1987 ல் நான் மாணவர் அமைப்பில் சேரும் போது கட்சியின் பெயரை வெளியில் சொன்னால் கூட உச்சரிப்பதற்கு சிரமப்படுவார்கள். இந்த கட்சி ஆளும் கட்சியாக வரும் என்பது கூட எங்களுக்கு ஒரு போதும் தெரியாது. இந்த கட்சிகள் இணைந்து வாழ்க்கையை தியாகம் பண்ணியவர்கள் கூட இருக்கிறார்கள். எங்களுக்கு முதலில் நாடு முக்கியம், அதற்கு பின்பாக கட்சி அதற்குப் , பின்பு தனி மனிதன் என்ற ஒன்றை இந்த கட்சி எங்களுக்கு பழக்கப்படுத்துகிறது என்று கூறினார்.
பா.ஜ.க., அ.தி.மு.க கூட்டணி குறித்த கேள்விக்கு,
முதலில் கூட்டணியை அமையாது என்று பேசிக்கொண்டு இருந்தார்கள், கூட்டணி அமைந்ததற்கு பிறகு இரண்டு கட்சியும் ஒன்னா வருமா ? என்று கேள்வி இருந்தது? ஆனால் எங்களை பொறுத்த வரை, மத்திய அமைச்சர் அமித்க்ஷா வழிகாட்டுதல் படி, அமைக்கப்பட்டு இருக்கும் இந்த கூட்டணி மிகச் சிறப்பாக செயல்படும். எங்களுடைய கூட்டணி திராவிட முன்னேற்றக் கழக அரசை வீட்டுக்கு அனுப்புவது என்ற ஒற்றை குறிக்கோளோடு செயல்படுகிறது. ஒருங்கிணைப்பு என்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இயல்பாக வருவதால் எந்த பிரச்சனையும் இல்லாமல் கூட்டணியில் சிறப்பாக எடுத்துச் செல்வோம் என கூறினார்.
கூட்டணி ஆட்சி அமைப்போம் என அமித்ஷா கூறுகிறார், ஆனால் எடப்பாடி பழனிசாமி அதைப்பற்றி எதுவும் கூறவில்லையே என்ற கேள்விக்கு,
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் இருக்கிறது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமை வகிக்கிறது. இந்த கூட்டணியின் உடைய வேலை 2026 ல் தி.மு.க வை வீட்டிற்கு அனுப்புவது. மீதி அனைத்தையும் எங்களுடைய தலைவர்கள் முடிவு செய்வார்கள் என கூறினார்.
ஏற்கனவே இருக்கும் அம்பேத்கர் சிலையை பொது இடத்தில் வைக்க வேண்டும் என பல கட்சிகள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு,
நான் மாநில அரசுக்கு அந்த கோரிக்கையை வைக்கிறேன், ஏற்கனவே இருக்கும் சிலையை ஏன் எடுக்க வேண்டும். புதிதாக சிலையை வைக்க சொல்லி கேட்கலாம். நான் நிச்சயமாக கேட்கிறேன் என கூறினார். சட்டப்பேரவையில் வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயமாக நான் பேசுகிறேன்.
அதேபோல சட்டப்பேரவையில், நான் பேசும்போது மட்டும் ஏன் டிஸ்கனக்ட் செய்கிறீர்கள், என்பதைத் தான் நான் பேரவை தலைவர் முன்பே கேள்வியாக வைத்தேன். எங்கள் தொகுதிக்காக நான் பேசிய வீடியோவை கொடுங்கள் என்று சொல்லி எத்தனையோ , முறை கேட்டு விட்டேன். ஆனால் அதைக் கூட கொடுக்கவில்லை. நான் பேசும் வீடியோவை எடிட் செய்யும் எடிட்டருக்கு ஆஸ்கார் அவார்ட் தான் கொடுக்க வேண்டும். நான் பேசும் ஒரு வார்த்தை கூட வருவது இல்லை. எதிர்க்கட்சி தலைவருமே இதை குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கிறார்.
பேரவை தலைவரின் செயல்பாடு எப்படி ? இருக்கிறது என்ற கேள்விக்கு,
பேரவை தலைவரின் மீது, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நம்பிக்கை இல்லா தீர்மானமே கொண்டு வந்து விட்டார்கள். நிறைய நேரங்களில் பேரவை தலைவர் வயதில் மூத்தவர், அரசியல் அனுபவம் வாய்ந்தவர், ஒரு திராவிட சிந்தனையோடு மாறி இருக்கிறார். நிறைய நேரங்களில் மந்திரிகள் சொல்லும் பதிலை அவரே சொல்ல வேண்டும் என விரும்புகிறார். அதனால் எங்களுக்கெல்லாம் அது பெரிய சிரமமாக உள்ளது. பேரவையின் தலைவரின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என கூறினார்.
என்.டி.ஏ கூட்டணி குறித்த கேள்விக்கு,
தேர்தல் நெருங்க, நெருங்க வெற்றி கூட்டணி யார் என்பதை மக்கள் நிச்சயம் பார்ப்பார்கள் அரசியல் கட்சிகளும் பார்ப்பார்கள். இன்னும் ஆறு மாதங்களில் என்.டி.ஏ கூட்டணியில் எத்தனை கட்சிகள் வந்து சேரப் போகிறது என்பதை அனைவரும் பார்த்தார்கள் என்று கூறினார்.
அதே போல o. பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறாரா ? என்று கேள்விக்கு, .
மத்திய அமைச்சர் என்ன பதில் கூறினாரோ ? அதுவே என்பதில் என்று கூறினார்.
அண்ணாமலை தனிப்பட்ட காரணங்களுக்காக, உத்தரகாண்டர்க்கு சென்று இருக்கிறார். மாநிலத் தலைவர் கோயம்புத்தூர் வரும்பொழுது அண்ணாமலை நிச்சயம் உடன் வருவார் என்று கூறினார்.

