• Fri. Apr 19th, 2024

காட்டுப்புத்தூர் பேரூராட்சி பணியாளர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

ByJawahar

Jan 31, 2023

திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் செயல் அலுவலர் ச.சாகுல் அமீது தலைமையில் தீண்டாமை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் தீண்டாமை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு செயல் அலுவலர் ச.சாகுல் அமீது தலைமையில் பேரூராட்சி மன்ற தலைவர் .சு.சங்கீதா சுரேஷ் மற்றும் துணைத்தலைவர் சி.சுதா சிவசெல்வராஜ் ஆகியோரின் முன்னிலையில் அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியான இந்திய அரசியலமைப்பினால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீது தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் இளநிலை உதவியாளர்கள் இராஜேந்திரன், சித்ரா, பாரதியார், வரித்தண்டலர் சர்மிளா, சதாசிவம், துப்புரவு பணி மேற்பார்வையாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *