ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் தமிழ்நாடு,புதுச்சேரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பிப்ரவரி 1ஆம் தேதி இலங்கை கடற்கரையை அடைய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிப்ரவரி 1 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.