பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், EV கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் இசைத்தட்டை வெளியிட்டு வாழ்த்தி பேசினார் நிகழ்ச்சியில் படத்தின்இயக்குநர் நடிகர் EV கணேஷ் பாபு பேசியதாவது…
நானும் பத்திரிக்கையாளனாக இருந்து வந்தவன் தான். 2023ல் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் நான் கலந்துகொள்வது மகிழ்ச்சி. நான் இங்கு இன்று இந்த மேடையில் இருக்க முக்கிய காரணம் எடிட்டர் லெனின் அவர்கள் தான் அவரது ஊக்கத்தில் தான் இந்த திரைப்படம் நடந்தது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் இந்த நிகழ்விற்கு வந்து வாழ்த்துவது மிக மகிழ்ச்சி. ஶ்ரீகாந்த் தேவா இப்படத்தில் அருமையான இசையைத் தந்துள்ளார். சித் ஶ்ரீராம் மிக அரிதாக தேர்ந்தெடுத்து பாடல்கள் பாடுகிறார். எங்கள் படத்தில் நான்கு மொழிகளில் அவர் பாடித் தந்தது மகிழ்ச்சி. நடிகை சிருஷ்டி டாங்கே கட்டிலில் தமிழ்ப்பெண்ணாகவே மாறிவிட்டார். இந்த படம் அவருக்கு முக்கியமான படமாக அமையும். வைட் ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு இப்படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. நம் பாரம்பரியத்தை போற்றும் படமாக இப்படம் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் என்றார்
ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிசங்கர் பேசியதாவது..
நான் பிரஸ்ஸில் போட்டோகிராஃபராக தான் வாழ்வை ஆரம்பித்தேன். நான் பத்திரிக்கையாளன் என்று சொல்வதில் பெருமை. லெனின் சார் கூப்பிட்டு இந்தக்கதை சொன்ன போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மிக உணர்வுப்பூர்வமான கதையாக இருந்தது. சென்னை காரைக்குடி பகுதிகளில் படமெடுத்துள்ளோம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும் என்றார்
நடன இயக்குநர் மெட்டி ஒலி சாந்தி பேசியதாவது…
அந்தக்காலத்தில் காதலுக்கு குழந்தைக்கு எனத் தனித்தனியாக பாடல் இருக்கும் கதையோடு சேர்ந்து இருக்கும். இப்போது
பாடல் கமர்ஷியலாக மாறிவிட்டது. இதை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். நடன இயக்குநராக பல நேரங்களில் இது எனக்கு தோன்றியிருக்கிறது. இப்போது ஆடியன்ஸ் மாறியுள்ளார்கள். கதைக்காக படம் பார்க்கிறார்கள். இப்படத்தில் நீங்கள் பாடலுக்காகவே படம் பார்ப்பீர்கள். பாடலே கதையை சொல்லும். ஶ்ரீகாந்த் தேவா சாருக்கு ஸ்பெஷல் நன்றி. இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு
சார் மிக அற்புதமாக உருவாக்கியுள்ளார் என்றார்

இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த்தேவா பேசியதாவது…
இந்த வாய்ப்பை தந்த, சினிமாவுக்கு காட்ஃபாதராக இருக்கும் லெனின் சாருக்கு நன்றி. மிக அற்புதமாகப் படத்தை உருவாக்கியதற்கு இயக்குனருக்கு நன்றி. வைட் ஆங்கிள் ரவி சார் அட்டகாசமான விஷுவல்ஸ் தந்துள்ளார். என் இசையில் கிளாசிக்கல் மியூசிக் இல்லையே என வருத்தப்படுவேன் கட்டில் படம் மூலமாக அது மாறும் என்றார்
கதாநாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே பேசியதாவது…
இந்தப்படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சி. தமிழ் பாரம்பரியத்தை இந்தப்படம் எடுத்துக்காட்டும். இந்தப்படத்தை நான் மிகவும் நம்புகிறேன். இந்தப்பாடல்கள் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்குமென நம்புகிறேன் என்றார்
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் பேசியதாவது…
மிகச்சிறப்பான படைப்பாக கட்டில் திரைப்படத்தை உருவாக்கியிருக்கும் இ.வி.கணேஷ்பாபு குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். வியாபார நோக்கம் இல்லாமல் சமூக சூழலை சுற்றி இக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எளிமையான வாழ்வை சொல்லும் எதார்த்தமான படமாக அமைந்திருப்பதால் மிகப்பெரிய வெற்றிபெறுமென வாழ்த்துகிறேன். மாண்புமிகு கலைஞர் அய்யா அவர்கள் திரைத்துறை மீது அக்கறை கொண்டவராக இருந்தார். அதே போல் இன்று, நம் முதல்வர் ஸ்டாலின் அவர்களும் திரைத்துறை மீது மிகுந்த அக்கறையோடு உள்ளார். தமிழ்நாடு அரசு சினிமாத்துறை சிறந்துவிளங்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. திரைத்துறையிலிருந்து பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன அவை அனைத்தையும் அரசு ஆராய்ந்து செய்து தருமென உறுதி கூறுகிறேன் என்றார்
- அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகாம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் […]
- ஊட்டி தேவர் சோலை ஊற்று நீரில் கொட்டப்படும் கோழிகழிவுகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கைகட்டி அருகே உள்ள தேவர் சோலை பகுதியில் கரும்பாலம் என்ற இடத்தில் […]
- 30கோடி ரூபாய் மோசடி.., சேலம் அருகே பரபரப்புகாடையாம்பட்டி அருகே சதுரங்க வேட்டை பட பாணியில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 30கோடி ரூபாய் […]
- நீதித்துறையின் மீது உள்ள நம்பிக்கை மக்களுக்கு குறை துவங்கிவிடும்.., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன்சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியது.., சென்னை […]
- சிவகாசியில் துணிகரம்…
பர்னிச்சர் விற்பனை கடையின் மேற்கூரையை உடைத்து பணம், செல்போன்கள் கொள்ளை…..விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாரதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது அபுதாகிர். இவர் சிவகாசி – […] - ராஜபாளையம் அருகே, மனைவியை அரிவாளால் வெட்டிய கணவருக்கு போலீஸ் வலைவீச்சு…..விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள அயன்கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் நிவேதா (20). இவரது கணவர் இசக்கிமுத்து […]
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை…
டிடிவி தினகரன் அறிவிப்பு _ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அம்மா மக்கள் […] - அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் […]
- மதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் தீ விபத்துமதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை […]
- துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலிமதுரையில் துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தால் உயிரிழந்த மக்கள் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி […]
- மஞ்சூர் கோவிலில் அம்மன் தாலி திருட்டு -காவல்துறை விசாரணைநீலகிரிமாவட்டம் மஞ்சூரில் கோயிலில் அம்மன் தாலி திருடபட்டுள்ள நிலையில் காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை […]
- மதுரை – சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலைமதுரை மாவட்டம் சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை பிணத்தை கைப்பற்றி சோழவந்தான்.போலீசார் விசாரணைமதுரை […]
- மதுரையில்-பெண்களை பார்த்து ஏளனமாக சிரித்தபடி சென்ற உதயநிதிமதுரையில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு அலங்கரித்து வைக்கப்பட்ட கரும்பு, வாழை, இளநீரை கூட்டம் கூட்டமாக அள்ளி […]
- நீலகிரி-பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்நீலகிரி மாவட்டம்.பந்தலூரை அடுத்துள்ள குந்தலாடி குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நாழைந்ததால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்…பந்தலூர் சுற்று […]
- பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!பிரதமர் நரேந்திர மோடிக்கு , தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கோவிட் பெருந்தொற்று காலத்தில், […]