• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா..,

ByP.Thangapandi

Jun 27, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆ.இராமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அனஞ்சி பெருமாள், கல்யாண கருப்பசாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக நேற்றைய முன் தினம் கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கப்பட்டு இன்று பூர்ணாவதி யாகத்துடன் மூன்று கால யாக பூஜைகள் நடைபெற்று கடம் புறப்பாடாகி, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

இந்த கும்பாபிஷேக விழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக தரிசனம் செய்தனர்., விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விழா கமிட்டியினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.