தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தப்பியோடிய கைதிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP) மகேஷ் குமார் தலைமையிலான காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், தப்பியோடிய கைதிகளான மீனாட்சி சுந்தரம் மற்றும் திருப்பதி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
தப்பியோடிய கைதிகளைப் பிடிக்கும் பணியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஏடிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையில் மேலும் இரண்டு கைதிகள் கைது மீனாட்சி சுந்தரம், திருப்பதி ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.





