கர்நாடக முதல்வராக பொறுப்பேற்று 100 நாட்களை நிறைவு செய்ததை முன்னிட்டு முதல்வர் பசவராஜ் பொம்மை 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடியை சந்தித்த பசவராஜ் பொம்மை கர்நாடக அரசியல் நிலவரம், கர்நாடக அரசின் புதிய திட்டங்கள் குறித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடகா தாக்கல் செய்துள்ள திட்ட வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து, அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து பசவராஜ் பொம்மை இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோரையும் சந்திக்க இருக்கிறார்.