• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வரம்பு மீறும் கரண் ஜோகர்.. அந்தரங்கத்தை அம்பலமாக்கிய தேவரகொண்டா…

இந்தியில் கரண் ஜோகர் தொகுத்து வழங்கி வரும் காஃபி வித் கரண் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய வில்லங்கமானகேள்விகளை நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களிடம் கேட்டு ஊடகங்களுக்கு தலைப்பு செய்திகளை ஏற்படுத்தி கொடுத்துவருகிறார் கரண்.

அந்த வகையில் தற்போது லிகர் படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே இருவரிடமும் கேட்கப்பட்ட கேள்விகள் வரம்புமீறியதாக உள்ளதுடன், அதற்கு அவர்கள் தெரிவித்த பதில்களும் அந்தரங்கம் புனிதமானது, ரகசியமானது என்பதை சுக்குநூறாக்கியுள்ளது. ஏற்கனவே விஜய் தேவரக்கொண்டா நடிகை ராஷ்மிக்கா மந்தனாவுடன் டேட்டிங் செய்து வருவதாக அனன்யா கூறியிருந்த பதில் சர்ச்சையாகிருந்தது. ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரக் கொண்டா இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் கசிந்துவந்த நிலையில் அதனை இருவருமே மறுத்து இருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அதிகரித்து வரும் நிலையில் ராஷ்மிகாவுக்கு அனன்யா கூறிய பதில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது தொகுப்பாளர் கரண் ஜோகர்… விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டேவிடம் பொது வெளியில் செக்ஸ் வைத்து கொண்டது உண்டா என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு விஜய் தேவரகொண்டா… சற்று தயங்கியபடியே, சிறிய படகு மற்றும் காரின் பின் இருக்கையில் செக்ஸ் வைத்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார். இதே கேள்வியை அனன்யா பாண்டேவிடம் கேட்ட போது… தான் உறவே கொண்டது இல்லை என கூறியுள்ளார். இவருடைய இந்த பதிலையும் கடுமையாக கிண்டலடித்துள்ளார் கரண் ஜோகர்.