• Sat. Apr 20th, 2024

கரைசேருவாரா லைகா தமிழ்குமரன் முட்டு சந்தில் முரளி இராமசாமி

“தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வருகிற 30 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மன்னன், தேனாண்டாள் முரளி ராமசாமி ராமநாராயணன் தலைமையிலான இரண்டு அணியினரும் வெளிமாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தயாரிப்பாளர்களிடம் வாக்குகள் சேகரிக்கும் பணியில் கடந்த வாரம் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். கடந்த முறை நடைபெற்ற தேர்தலுக்கான செலவை செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன் செய்தார். தற்போதைய தேர்தலுக்கான செலவை லைகா நிறுவனமும், ஏஜி எஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. இதன் காரணமாக சங்கத்தின் இரண்டு துணை தலைவர்கள் பதவிக்கு அந்நிறுவனங்களை சேர்ந்த தமிழ்குமரன், அர்ச்சனா கல்பாத்தி இருவருக்கும்போட்டியிடும் வாய்ப்பை தேனாண்டாள் முரளி தலைமையிலான தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி வழங்கியுள்ளது. இவர்கள் இருவரையும் எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மைக்கேல் ராயப்பன் கடுமையான போட்டியாளராக இருப்பார் என கருதியதால் அவரை போட்டியில் இருந்து விலகி கொள்ள ஏற்பாடு செய்யுமாறு தேனாண்டாள் முரளிக்கு அர்ச்சனா கல்பாத்தி, லைகா தமிழ்குமரன் இருவரும் உத்தரவிட்டனர்.

மன்னன் தலைமையிலான அணியில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டமைக்கேல் ராயப்பன் தாக்கல் செய்த வேட்புமனுவை வாபஸ் வாங்குமாறு இயக்குநர் லிங்குசாமியின் தம்பி போஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். மைக்கேல் ராயப்பனுக்கு வட்டியில்லா கடனாக 2.5 கோடி ரூபாயை லைக்கா வழங்கும் என போஸ் உறுதிகூறியதன் அடிப்படையில் வேட்புமனுவை வாபஸ் வாங்கிவிட்டு தேனாண்டாள் முரளியை நேரில் சந்தித்து அவரது அணிக்கு தனது ஆதரவை பகிரங்கமாக அறிவித்தார் மைக்கேல் ராயப்பன். இதனால் தமிழ்குமரன், அர்ச்சனா கல்பாத்தி இருவரும் எளிதாக வெற்றிபெற்று விடலாம் என்று மெத்தனமாக இருந்தனர்.


சொந்த நலனுக்காக கார்ப்பரேட் நிறுவனத்திற்கு சாதகமாக, செயல்படும் தேனாண்டாள் முரளி தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிரான அலை தயாரிப்பாளர்களிடம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 62 தயாரிப்பாளர்களிடம் வாக்குகள் கேட்பதற்காக தேனாண்டாள் முரளி அணியினர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அந்த கூட்டத்தில் வெறும்12 தயாரிப்பாளர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் ராசாத்தி பாண்டியன் என்பவர் தன்னுடைய தயாரிப்பில் வெளியான “ஒன் வே” திரைப்படத்தை தேனாண்டாள் நிறுவனத்தின் சார்பில் வெளியிடுவதாக 15 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு படத்தை வெளியிடாமல் ஏமாற்றி விட்டீர்கள். வருடங்கள் பல கடந்தும் இன்னும் என்னிடம் வாங்கிய 15 லட்சம் பணத்தை திருப்பிக் கொடுக்க வில்லை. நீங்கள் தயாரிப்பாளர்களை காப்பாற்றப் போகிறீர்களா ? பணத்தைக் கொடுத்துவிட்டு இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என தனது நண்பர்களுடன் முரளியை முற்றுகையிட்டுள்ளார்.இதனை எதிர்பார்க்காத முரளி அணியினர் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளனர். பின்னர் சமாளிக்க முயன்று, முடியாமல் போனதால் வருகிற மே மாதம் முதல் வாரத்தில் 15 லட்சம் பணத்தை திருப்பித் தருவதாக பத்திரத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பித்து வந்திருக்கிறார். வாக்கு கேட்பதற்காக தேனாண்டாள் முரளியுடன் கோவை சென்றிருந்த துணை தலைவர் லைகா தமிழ் குமரன் இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இவரது அணியில் வேட்பாளராக போட்டியிடும் நமக்கு எப்படி வாக்களிபார்கள்என தயாரிப்பாளர்களிடம் புலம்பியுள்ளார் தமிழ்குமரன்.என்ன செய்வீர்களோ எனக்கு தெரியாது அர்ச்சனா கல்பாத்தியை காட்டிலும் அதிக வாக்குவாங்கி இந்த தேர்தலில் நான் வெற்றி பெற வேண்டும் அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்கிறேன் என கூறியுள்ளாராம் தமிழ்குமரன்

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் நம்மிடம் பேசுகையில்.. ஊரெல்லாம் பல பேரிடம் கடன் வாங்கி வைத்துள்ளார் தேனாண்டாள் முரளி. இந்த தேர்தலில் அவர் தோற்றால் கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கி விடுவார்கள். ஏதோ ஒன்று இரண்டு பேரிடம் கடன் வாங்கி இருந்தால் நண்பர்கள் உதவுவார்கள். ஊரெல்லாம் மிகப்பெரிய தொகையை கடனாக வாங்கியுள்ளார். இவரை நம்பி தமிழ்குமரன் எப்படி போட்டிபோட்டார் என்கின்றனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கதேர்தலில் வெற்றிவாய்ப்பு யாருக்கு சாதகமாக உள்ளது என்பது பற்றி நமது குழுவினர் எடுத்துள்ள கருத்து கணிப்பு முடிவுகள் 29 ஆம் தேதி காலை வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *