• Wed. Apr 24th, 2024

கன்னியாகுமரி சுற்றுலா படகின் போக்குவரத்து கட்டணம் உயர்வு

கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின்.சுற்றுலா படகின் போக்குவரத்து கட்டணம் உயர்வு.
கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறைக்கு.பூம்புகார் கப்பல் போக்குவரத்து படகு போக்குவரத்து நடத்தி வருகிறது.
கடலில் சுற்றுலா பயணிகள் படகு பயணம் செய்யும் கட்டணம் இன்று முதல்(மார்ச்_17) முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுவரை படகு பயணத்தின் கட்டணம் ரூ.50.00என இருந்தது இன்று முதல் ரூ.75 ஆகவும், சிறப்பு கட்டணம் ரூ.200.00என இருந்து ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை பாறைக்கு படகு பயணம் தடை படும் போதும் அதற்கான படகு கட்டணம் குறைக்கப்படுவதில்லை என்ற சுற்றுலா பயணிகளின் குற்றச் சாட்டுகள் அன்று முதல் இருந்து வரும் நிலையில்.இப்போதைய கட்டணம் உயர்வுக்கு பின். திருவள்ளுவர் சிலை பாறைக்கு படகு போக்குவரத்து நடை பெறாத நாட்களில் அதற்கான கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகள் எழுப்பும் கோரிக்கையாக உள்ளது.தமிழக அரசு சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *