• Thu. Apr 25th, 2024

கன்னியாகுமரியல் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்

தேசிய சட்டபணிகள் ஆணைக்குழுவின் 25வது ஆண்டுவிழாவை முன்னிட்டு வரும் 31ஆம் தேதி கன்னியாகுமரியல் மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதியும், தேசிய சட்டபணிகள் அணையக்குழு தலைவருமான உதித் உமேஷ் லலித் பங்கேற்கும் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற இருப்பதாக குமரி மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன் நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தினவிழா மற்றும் சட்டபணிகள் ஆணையகுழுவின் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு, நாட்டின் அனைத்து கிராம மக்களுக்கும் சட்ட விழிப்ப்ணர்வு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் கிராமங்கள் தோறும் சட்டபணிகள் விழிப்புணர்வு தொண்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சட்ட விழிப்புணர்வு முகாம்கள் ஏற்படுத்தி வருகிறார்கள். அந்ந நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வரும் 31ஆம் தேதி கன்னியாகுமரியில் மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதியும் தேசிய சட்டபணிகள் ஆணைய குழு தலைவருமான உதித் உமேஷ் லலித் கலந்து கொண்டு ஒரு புதிய வடிவிலான சட்ட சேவை முகாமை துவக்கி வைக்கிறார்.

இந்த முகாமில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் பங்கேற்று தங்களது துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திகொள்ளமாறு கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *