• Sun. May 10th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

பள்ளி கல்லூரி வாகனங்களில் ஆய்வு!..

நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை தொடர்ந்து பள்ளி வாகனங்கள் ஆய்வு திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் பகுதிகளைச் சேர்ந்த 175 பள்ளி வாகனங்கள் இன்று ஆய்வு செய்யப்பட்டது. கேஎஸ்ஆர் கல்லூரி வளாகத்தில் நடந்த ஆய்வில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் இளவரசி கலந்துகொண்டு பஸ்களை ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன், போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகர், குமாரபாளையம் போக்குவரத்து ஆய்வாளர் சத்தியா ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி வாகனங்களின் உள்புறம் அவசரகால வழி, சிசிடிவி கேமரா, படிக்கட்டுகள், வாகனங்களை ஓட்ட வேண்டிய ஸ்டிக்கர்கள், போக்குவரத்து அலுவலகம் குறித்த தகவல்கள் ஆகியவை இருக்கிறதா என வருவாய் கோட்டாட்சியர் இளவரசி ஆய்வு செய்தார். அதேபோல் தீ தடுப்பு கருவிகள் ஓட்டுனர்கள் இயக்க தெரியுமா என கேட்டறிந்தார்.

பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்த சிறு சிறு தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டு திருத்திக் கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டது. பள்ளிக்கூட வாகனங்கள் சிறு குழந்தைகள் ஏறும் வாய்ப்பு இருப்பதால் ஆய்வில் கூடுதல் கவனம் செலுத்த போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு வருவாய் கோட்டாட்சியர் இளவரசி அறிவுறுத்தினார்.