• Thu. May 28th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

கன்னியப்ப பிள்ளைபட்டி சூளை கருப்பசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்.

தேனி மாவட்டம் ,ஆண்டிபட்டி தாலுகா கன்னியப்ப பிள்ளை பட்டியில் உள்ள குலாலர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சூளை கருப்பசாமி மற்றும் அருள்மிகு மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஊர் முழுவதும் வண்ண விளக்குகளால் மின்னியது.இதனையடுத்து இரண்டு நாட்கள் யாகசாலை பூஜைகள் நடந்தது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டு, காலை சூளை கருப்பசாமி மற்றும் பரிவார குதிரைக்கு குடமுழுக்கு அபிஷேகம் நடைபெற்றது . பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இரண்டு நாட்களாக நடைபெற்றது மாபெரும் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது . விழா ஏற்பாடுகளை குலாலர் உறவின்முறையினர் மற்றும் கோவில் விழா கமிட்டியார் செய்திருந்தனர்.