

சோழவந்தான் எம். வி .எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடந்த விழாவில் தாளாளர் டாக்டர் மருது பாண்டியன் விழாவிற்கு தலைமை தாங்கி, காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து, மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். இதில் முதல்வர் செல்வம் வரவேற்றார். ஆசிரியை தீப ரோகினி நன்றி கூறினார். இதில் பள்ளியின் தலைவர் மணி முத்தையா, நிர்வாகி வள்ளி மயில் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ. மாணவிகளின் விளையாட்டுப் போட்டிகள் கட்டுரை போட்டிகள், ஓவிய போட்டிகள், பேச்சுப்போட்டிகள் ஆகியவை நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. சி.எஸ்.ஐ.தொடக்கப் பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த தினவிழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு தலைமை ஆசிரியர் ராபின்சன்செல்வகுமார் தலைமை தாங்கினார். ஆசிரியைகள் பிரேமாஅன்னபுஷ்பம் இனிப்பு வழங்கினார். ஆசிரியைகள் திவ்யா,கிறிஸ்டிஜெயஸ்டார், பிரேம்குமாரி ஆகியோர் காமராஜரின் வாழ்க்கை குறித்து பேசினார்கள். இதே போல் கல்வி வளர்ச்சி நாள் விழா சோழவந்தான் சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமைஆசிரியை ராஜாத்தி தலைமையில் நடந்தது.
