

சோழவந்தான் லயன்ஸ் கிளப் சங்கம், மெட்வெல் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் பேர்ல் பல் மருத்துவமனை பாண்டியன் ஹார்ட் ஸ்பெஷாலிட்டி கிளினிக் இணைந்து இலவச இருதயம் பல் மற்றும் பொது மருத்துவ முகாம் நடத்தினர். இந்த முகாமிற்கு சோழவந்தான் லயன்ஸ் கிளப் சங்கத் தலைவர், கவுன்சிலர் டாக்டர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் ஜெயச்சந்திரன் வட்டாரத் தலைவர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மகேந்திரன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட ஆளுநர், இன்ஜினியர் கே. செல்லப்பாண்டி, மாவட்ட முதல் துணை ஆளுநர் டாக்டர் சசிகுமார் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து, லயன்ஸ் கிளப் சங்கத்தின் சேவை திட்டத்தை பற்றி பேசினார்கள். முகாமில் சர்க்கரை அளவு, உடல் பருமன் அளவு, ஆக்சிஜன் அளவு, உணவு ஆலோசனை, பல் பிரச்சனைக்கு ஆலோசனை, வாய் சுகாதார ஆலோசனை, ஈசிஜி, ரத்த அழுத்தம், இருதய துடிப்பு அளவு, பொது மருத்துவ ஆலோசனை, பல் மருத்துவர் ஆலோசனை, இருதய மருத்துவர் ஆலோசனை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு சத்து மாத்திரை இலவசமாக வழங்கினர். பொருளாளர் ஜெய்கணேஷ் நன்றி கூறினார். இம்முகாமில் சோழவந்தான் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து ஏராளமானவர்கள் பயன்பட்டனர்.
