• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கமல்ஹாசன் பிறந்தநாள் ட்ரீட்

Byமதி

Oct 22, 2021

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் வரும் நவம்பர் 7-ஆம் தேதி தனது 67-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கடந்த வருட பிறந்தநாளின் போது கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ படத்தின் அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் பூஜையுடன் தொடங்கி படப்பிடிப்பு, சமீபத்தில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை முடித்து, இரண்டு வாரங்கள் படக்குழுவிற்கு பிரேக் விடப்பட்டது.

இந்த நிலையில், கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7-ஆம் தேதி ’விக்ரம்’ படத்தின் முன்னோட்ட வீடியோ எனப்படும் கிளிம்ப்ஸ் வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற நிலையில், கிளிம்ப்ஸ் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.