முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் 90 வது பிறந்தநாளையொட்டி, பேக்கரும்புவில் அமைந்ததள்ள தேசிய நினைவகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் 90 வது பிறந்தநாளையொட்டி, பேக்கரும்புவில் அமைந்ததள்ள தேசிய நினைவகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நினைவகத்தில் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரத்தில் 1931 அக்.15ல் பிறந்த அப்துல் கலாம், விஞ்ஞானியாக உயர்ந்தார். அக்னி நாயனாக அவர் திறமையை பாராட்டி நாட்டின் உயர் விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பொறுப்பேற்ற கலாம், தனது எளிமையால் மக்கள் ஜனாதிபதி என்றழைக்கப்பட்டார். மாணவர்கள், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். இந்நிலையில் 2015 ஜூலை 27 ல் அவர் மறைந்தார். அவரது உடலானது அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அப்துல்கலாம் நினைவிடத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு, ஆராய்ச்சி மேம்பாட்டு துறையின் சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு 2017 ஜூலை 27 ல் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.
இந்த நிலையில் அப்துல்கலாமின் 90-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மணிமண்டபம் பல வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு பிரகாசமாக ஜொலிக்கிறது. கலாம் குடும்ப உறுப்பினர்கள் நாளை காலை 8 மணிக்கு கலாம் நினைவக்ததில் சிறப்பு பிரார்த்தனை செய்ய உள்ளனர்.
கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி கலாமின் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.