

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என பல நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை காஜல் கடந்த ஆண்டு தொழிலதிபர் கௌதம் கிட்சிலு என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அதனை தொடர்ந்தும் பல படங்களில் கமிட்டான நடிகை காஜல் கர்ப்பமான நிலையில் ஒவ்வொரு படங்களிலிருந்தும் விலகினார். அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்த அவர் தனது கர்ப்பக்கால புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். இந்நிலையில் காஜல் அகர்வால் மற்றும் கௌதம் கிட்சுலு தம்பதியினருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
