
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேற்கு ரிசர்வ் லைன் அம்பேத்கர் காலனியில் ஸ்ரீசெல்வ மகா கணபதி, ஸ்ரீ மாரி அம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்து வந்தன.

திருப்பணி வேலைகள் முடிவடைந்த நிலையில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜியிடம் விழா கமிட்டியினர் அழைப்பிதழ் கொடுத்தனர்.
அழைப்பிதழை பெற்றுக் கொண்டு அவசியம் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதாக தெரிவித்து அன்னதானத்திற்கு ரூபாய் 15,000 நன்கொடை கொடுத்தார்.
ஆனையூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட அதிமுக கட்சியினர் உடன் இருந்தனர்.
