• Wed. Nov 4th, 2026

போக்குவரத்துபோலீசார் திடீரென அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதால் பரபரப்பு..,

ByKalamegam Viswanathan

Nov 4, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் ஒலிப்பான்களைப் பயன்படுத்திய வாகனங்களை கண்டறிந்து போக்குவரத்து போலீசார் திடீர் நடவடிக்கை மேற்கொண்டனர்.,

இதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்கள் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி தலைமையில் போக்குவரத்து காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.,

இதில் மதுரை- தேனி மற்றும் தேனி -மதுரை செல்லும் பேருந்துகளை தடுத்து நிறுத்தி, அவற்றில் பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பான்களின் ஒலி அளவை டெசிபல் மீட்டர் கருவி மூலம் பரிசோதனை செய்தனர்.,

அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருந்த வாகனங்களை அடையாளம் கண்டு அதில் 20 க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துககளில் இருந்து ஒலிப்பான்களை அகற்றி பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,

மேலும், பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களைப் பயன்படுத்தக் கூடாது என பேருந்து ஓட்டுநர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.,