• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உயிர் காக்கும் முதலுதவி,குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு என் 2 உலக சாதனை முயற்சி..,

BySeenu

Aug 28, 2026

கோவை, இந்திய மருத்துவச் சங்கம் கோவை கிளை, எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்கள், பொன்னம்மாள் துரைசாமி கண் மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை இணைந்து, ஒரே இடத்தில் இரு பெரும் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம்களை நடத்தி இரண்டு எலைட் உலக சாதனைகளைப் படைத்துள்ளன.

ஒரே இடத்தில் அதிக நபர்கள் பங்கேற்ற அடிப்படை உயிர் காக்கும் பயிற்சி,
ஒரே இடத்தில் அதிக நபர்கள் பங்கேற்ற தனிநபர் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் ஆகிய இரண்டு உலக சாதனை இன்று காலை நடைபெற்றது.

எஸ்.என்.எஸ் கல்வி நிறுவன வளாகத்தில் காலை 08:50 மணி முதல் மாலை 04:00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் 2,500க்கும் மேற்பட மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
ஐ.எம்.ஏ வைச் சேர்ந்த 14 அனுபவமிக்க மருத்துவர்கள் தலைமைப் பயிற்சியாளர்களாகச் செயல்பட்டு, சிபிஆர், செயற்கை சுவாசம் அளித்தல், மூச்சுத்திணறலைச் சரிசெய்தல் மற்றும் அவசரகால முதலுதவி வழிமுறைகளை நேரடியாகச் செய்து காண்பித்து பயிற்சியளித்தனர்.

பாலியல் மற்றும் உடல் ரீதியான தொல்லைகளைத் தடுத்தல், ஆபத்தான சூழல்களைக் கண்டறிந்து தவிர்த்தல், பாதுகாப்பான தகவல் தொடர்பு மற்றும் உரிய நேரத்தில் புகாரளித்தல் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. எலைட் உலக சாதனையின் தூதர் மற்றும் மூத்த நடுவர் ஆர். ரக்ஷிதா நிகழ்வை ஆய்வு செய்து, சாதனையை உறுதிப்படுத்தி அதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்வை ஐ.எம்.ஏ கோவை தலைவர்டாக்டர் கோஷல் ராம், ஐ.எம்.ஏ கோவை கௌரவச் செயலாளர் டாக்டர் டி. பரமேஸ்வரன், எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்களின் செயலர் மற்றும் அறங்காவலர் பாலசுப்ரமணியன், எஸ். என். எஸ் டாக்டர் நளின், ஐ.எம்.ஏ மகளிர் மருத்துவர் பிரிவு தலைவர்டாக்டர் அனுஷா கோஷல் ராம் மற்றும் எஸ்.என்.எஸ் பார்மசி கல்லூரி முதல்வர்டாக்டர் எஸ். சதீஷ் குமார் ஆகியோர் முன்னின்று ஒருங்கிணைத்தனர்.

ஐ.எம்.ஏ தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் டாக்டர் ஏ.கே. ரவிகுமார் , மேற்கு மண்டல துணைத் தலைவர் டாக்டர் சி.பி சண்முகசுந்தரம், முன்னாள் கவுரவ மாநிலச் செயலாளர் டாக்டர் எஸ். கார்த்திக் பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். கல்லூரியின் உதவிப் பேராசிரியர் கலைவாணி வெற்றிவேல் மற்றும் பேராசிரியர்கள் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டனர்.