

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் பிரபலமான ஜூனியர் என்.டி.ஆர் ஹாலிவுட்டில் வலம் வரப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பான் இந்திய நடிகர்களை சினி உலகத்திற்கு அறிமுகப்படுத்தும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்-ஐ பிரபலப்படுத்தினார். ஜுனியர் என்.டி.ஆர் அதுவரை தெலுங்கு சினிமாவில் நடித்து வந்தார். அவருக்கும் தெலுங்கு சினிமா பார்க்கும் மக்களில் பெரும் ரசிகர்கள் இருந்து வந்தனர்.
ஆர்ஆர்ஆர் படத்தில் கொமாராம் பீம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி தனக்கு கொடுத்த வாய்பை பயன்படுத்தி கொண்டார். இப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் பயங்கர வசூல் செய்த பின் நெட்பிளிக்ஸில் ஒளிப்பரப்பானது. பாகுபலி அளவுக்கு படம் அமையவில்லை என்றாலும், இப்படத்திற்கு அப்படிப்பட்ட பேரும் புகழும் கிடைத்தது.
இப்படம் நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பு செய்யப்படும் ஆக்ஷன் திரில்லர் படமாகும். முன்னதாக பிரசாந்த் நீல் இவரை வைத்து படம் எடுக்கவுள்ளதாக கூறியிருந்தார். என்.டி.ஆர்31 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்கும் என்ற அறிவிப்பும் வந்தது. ஆர்.ஆர்.ஆர் படத்தில் இவருடன் நடித்த ஆலியா பட், ஹார்ட் ஆஃப் தி ஸ்டோன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இவரது முதல் ஹாலிவுட் படம் என்பது குறிப்பிடதக்கது.