ஜூன் – 5-ஆம் நாள்-“உலக சுற்றுச்சூழல் தினம்”
பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் ஆண்டுந்தோறும் ஜூன் 5-ஆம் நாள் “உலக சுற்றுச்சூழல் தினம்” கொண்டாடப்படுகிறது.
உலகெங்கும் வெப்பம் அதிகரித்து வருகிறது, ஆனால் அதன் தாக்கத்தை எல்லோரும் ஒரே மாதிரியாக உணர்வதில்லை. இதேபோலத்தான் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளும் உள்ளன என்று ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் “ஜூன் மாதம் 5-ஆம் நாள்” “உலக சுற்றுச்சூழல் தினமாக” கொண்டாடப்படுகிறது இந்தஆண்டுக்கான !”உலக சுற்றுச்சூழல் தினம்-2022″ ஸ்வீடனில் நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு அண்டும் ஒரு கருபொருளில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது 2022 ஆண்டுக்கான கருப்பொருள் “ஒரே ஒரு பூமி” என்பது பிரச்சார முழக்கம்,”இயற்கையுடன் இணக்கமாக வாழ்வது” என்பதை மையமாகக் கொண்டது.மரங்கள் நடுவதும்,
அவற்றை வளர்த்துப் பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாதது.பருவநிலை மாற்றதைப் பாதுகாக்கவும், பல்லுயிர்ப் நெருக்கத்தைப் பாதுகாக்கவும் மரங்கள் (காடுகள்) மிகவும் இன்றியமையாதவையாகும்.சுற்றுச்சூழல் மற்றும் இடத்திற்கு தகுந்தாற்போல ஒரு மரத்தை நடவில்லை என்றால் அதுவே தவறாக முடிந்துவிடும் என்கின்றனர் லண்டனில் உள்ள க்யூ தாவரவியல் பூங்காவை சேர்ந்த நிபுணர்கள். அதேபோல மரம் நடுவதற்கு முன் நாம் இருக்கும் காடுகளை அழிக்காமல் காப்பதும் முக்கியமான ஒன்று. பூமியில் வாழ்வதற்கு காடுகள் மிக அவசியம்.உலகில் உள்ள நான்கில் மூன்று பங்கு மரங்கள், உயிரினங்களுக்குக் காடுகள்தான் இருப்பிடம். கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்சைடு) உள்வாங்கி, உயிர் வளியை (ஆக்ஸிஜன்) வெளிவிடுபவை மரங்கள்!
உணவு, கனிகள், மூலிகைகள் மருந்துப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை நமக்கு அளித்து வருபவை காடுகள் தாம்.மரங்களை வளர்ப்போம்.ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களைத் தவிர்ப்போம்.
உங்கள் பிள்ளைகளுக்கோ ,பேரப்பிள்ளைகளுக்கோ நீங்கள் கொடுக்கபோகும் மிகப்பெரிய சொத்து அழகான,நோயற்றை வாழ்க்கை வாழும் சுற்றுச்சூழல்,மாசற்ற காற்று.சுத்தமான குடிநீர்,இதமான காலநிலை இவைமட்டுமே.
இயற்கையை பாதுகாத்து நம் சந்ததிகளுக்கு கொடுக்கவேண்டியது நாம் நம் பேரபிள்ளைகளுக்கு பட்டிருக்கும் கடன்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் !!
இயற்கையை பாதுகாப்பது நாம் நம் பேரப்பிள்ளைகளுக்கு பட்டிருக்கும் கடன்
