

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே 80 ஆண்டுகள் பழமையான கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது – உணவகம், பழக்கடை உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட கடைகள் சேதம்
மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நேதாஜி சாலையில் அமைந்திருந்த சுமார் 70, 80 ஆண்டுகள் பழமையான கட்டிடம் நேற்று நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது. மேலும் நள்ளிரவு நேரம் என்பதால் பெரும்பாலும் ஆள் நடமாட்டம் இல்லாததால் அதிஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
அங்கிருந்த உணவகம் பழக்கடை பெட்டிக் கடைகள் உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட கடைகள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி சேதமடைந்துள்ளது. தொடர்ந்து கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொருவராக சம்பவத்தை வந்து வந்த வண்ணம் உள்ளனர்.குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மதுரை கீழ வெளி வீதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சரவணன் மீது சுமார் 110 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரையில் பல பழமையான கட்டடங்கள் உள்ள நிலையில் தீயணைப்புத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டுகட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தநிலையில் இன்று நள்ளிரவில் திடீரென 70 ஆண்டுகளுக்கு மேல் கட்டப்பட்ட கட்டிடம் சரிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
