• Mon. Oct 19th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

காரைக்குடி வருகிறார் ஜே.பி.நட்டா..

ByA.Tamilselvan

Sep 15, 2022

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வரும் 22ம் தேதி காரைக்குடி வருகிறார்.
பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வருகிற 22-ம் தேதி மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்கு வருகிறார். அன்று மாலை 3.30 மணிக்கு காரைக்குடி எம்.ஏ.எம். மஹாலில் நடைபெறும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை நடத்துகிறார்.
தொடர்ந்து, மாலை 4.45 மணி முதல் 5.30 மணி வரை மாநில, மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இரவு, என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகள் குறித்து பேசுகிறார்.
மறுநாள் (23-ம் தேதி) காலை 7.45 மணிக்கு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். அதன் பின்னர், காரைக்குடி மஹாலில் 11 மணிக்கு பிற்பட்ட, மிக பிற்பட்ட அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மதியம் 12 மணிக்கு மாநில நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.