• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் வங்கி வாடிக்கையாளர் ஆலோசனை கூட்டம்..,

ByKalamegam Viswanathan

Aug 13, 2026

சோழவந்தான் பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர் ஆலோசனை கூட்டம் வங்கி வளாகத்தில் நடைபெற்றது. கிளை மேலாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். அனைத்து வியாபாரிகள் நலச்சங்க தலைவர் ஜவஹர்லால், ஹோட்டல் டீக்கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பி டி ஆர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வங்கி பீல்டு ஆபிசர் கல்யாணி வரவேற்றார். கள மேலாளர் ஜெயமணி, வங்கி அதிகாரிகள் மதன் குமார், லட்சுமிஸ்ரீ ஆகியோர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வங்கி கடன்கள் குறித்து ஆலோசனை வழங்கி பேசினர். சோழவந்தான் அனைத்து வியாபாரிகள் நல சங்க செயலாளர் ஆதி.பெருமாள் நன்றி கூறினார்.

இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் எம்.கே.முருகேசன், அனைத்து வியாபாரிகள் நல சங்க துணை தலைவர் கல்யாணசுந்தரம், அடக்கடை மற்றும் நகை கடை உரிமையாளர் சங்க நிர்வாகி ராஜா என்ற இருளப்பன், பொருளாளர் கேசவன், உள்பட சோழவந்தான் அனைத்து வியாபாரி சங்க நிர்வாகிகள் உட்பட வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.