• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

புத்தக மதிப்புரை நிகழ்ச்சி..,

ByKalamegam Viswanathan

Aug 13, 2026

அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையிலும், பேச்சாற்றலை மேம்படுத்தும் நோக்கிலும் புத்தக மதிப்புரை நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் 24 மாணவர்கள் 24 புத்தகங்களுக்கு மதிப்புரை வழங்கினார்கள். தலைமையாசிரியர் ஷேக் நபி தலைமை தாங்கினார். மாணவர்களுக்கு பயிற்சியளித்த தமிழாசிரியர்கள் நூருல்லாஹ், தெளபிக்ராஜா மற்றும் முகமது அஜாருதீன் ஆகியோருக்கு பள்ளியின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. புத்தக மதிப்புரை செய்த மாணவர்களை ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.

உதவித் தலைமையாசிரியர்கள் முகமது ரபி மற்றும் அல்ஹாஜ் முகமது ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.