


அதிமுக இரு பிரிவாக பிரிந்து இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு தனித்தனியே கட்சி எங்களுடையது என பல்வேறு வழக்குகளோடு நீதிமன்றங்களை நாடி வருகின்றனர். அதன் வழக்கும் தீர்ப்பு, மேல்முறையீடு என நீண்டு கொண்டு இருக்கிறது.இதில் ஓபிஎஸ் தரப்பு அனைவரும் ஒன்றாக இணைவோம் என அவ்வப்போது கூறினாலும், இபிஎஸ் தரப்பு அதற்கு வளைந்து கொடுப்பதாயில்லை. அண்மையில், அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமசந்திரன் அவர்களை ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சந்தித்தார். ஓபிஎஸ் உடன் வைத்தியலிங்கம். மனோஜ் பாண்டியன், ஜேடிசி.பிரபாகர் ஆகியோர் உடன் சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் பல்வேறு கருத்துக்களை கூறினார். அதில், தொண்டர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்களோ அதே பாதையில் தான் எங்கள் பயணம் இருக்கும் எனவும், அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

