


பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல்துறையின் சென்னை மாநகர காவல் இணை ஆணையர் மகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்களால் பாலியல் தொல்லை கொடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இது தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெண் போலீசுக்கு காவல் துறை அதிகாரி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சென்னை போக்குவரத்து பிரிவில் இணை ஆணையராக பணிபுரிந்து வந்தவர் மகேஷ்குமார் ஐபிஎஸ். இவர் மீது பெண் காவலர் ஒருவர் டிஜிபி. அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன்படி .ஐபிஎஸ். அதிகாரியான மகேஷ்குமாரை சஸ்பெண்ட் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைத்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அரசு துறைகளில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டிக்கு பெண் காவலரின் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாகா கமிட்டியில் இடம்பெற்று உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காவல் துறையில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகும் பெண்கள் துணிச்சலாக புகார் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

