சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளதால், நகைப்பிரியர்கள், வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 680 ரூபாய் அதிகரித்து, 48 ஆயிரத்து 120 ரூபாயாக்கு விற்கப்படுகிறது.
அதன்படி, நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 5 ஆயிரத்து 930 ஆக இருந்த நிலையில், இன்று 85 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 46 ஆயிரத்து 720 ரூபாயிலிருந்து 48 ஆயிரத்து 120 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 400 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னயில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து இருப்பது, சாதாரண மக்களிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் மாதங்களில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 50 ஆயிரம் ரூபாயை கடக்கும் என வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.