• Tue. Feb 18th, 2025

சனாதன சர்ச்சை வழக்கில் இன்று தீர்ப்பு

Byவிஷா

Mar 6, 2024

கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில், அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசிய விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசியிருந்தார். நிகழ்ச்சியின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்பு அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
திமுக எம்.பி ராசாவும் சானாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருவதால் ‘எந்த தகுதியின் அடிப்படையில், இவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள்?’ என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ–வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். 9 நாட்கள் விசாரணைக்கு பிறகு, கடந்த ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி வழக்குகளின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் திமுக எம். பி. ஆ.ராசாவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் இன்று தீர்ப்பளிக்கிறார்.