• Mon. May 6th, 2024

மெட்ரோ பார்க்கிங் கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

Byவிஷா

Apr 24, 2024

மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக கார், டூவீலர் போன்ற வாகனங்களுக்கான கட்டணத்தை மெட்ரோ நிர்வாகம் உயர்த்தப்பட உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2015 ல் மெட்ரோ தொடங்கப்பட்ட போது காலியாக சென்ற ரயில் பெட்டிகள் தற்போது நிரம்பி வழிகின்றன. தினமும் லட்சக்கணக்கானோர் தினசரி பள்ளி , கல்லூரி மற்றும் அலுவலகம் செல்ல பயன்படுத்தி வருகின்றனர். மெட்ரோவில் நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயன்பாட்டில் இருந்து வருகிறது. 2 வது மற்றும் 3 வது கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 2026க்குள் நிறைவடைந்து செயல்படத் தொடங்கி விடும் என்கின்றனர். பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களில் டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வைக்க கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது.
மாதாந்திர கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் அல்லாதவர்களும் கூட வாகனங்களை நிறுத்தி செல்வதையும் வாடிக்கையாக கொள்கின்றனர். அவர்களுக்கான கட்டணம் இன்னும் சில வாரங்களில் உயர்த்தப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ நிர்வாக அதிகாரி சமீபகாலமாக பொதுப் போக்குவரத்தில் மெட்ரோ ரயில் மக்களிடையே அதிக வரவேற்பு பெற்று வருகிறது. மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதுவதால் பார்க்கிங் பகுதியில் இடநெருக்கடியால் ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் தினமும் வாக்குவாதம் ஏற்பட்டு விடுகிறது. பெரும்பாலான நிலையங்களின் அளவைப் பொறுத்து பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பயணம் செய்பவர்களை தவிர மற்றவர்களும் பாதுகாப்பாக நிறுத்துவதற்காக மெட்ரோ ரயில் நிலையங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

விமான நிலையம், மீனம்பாக்கம், அண்ணாநகர் டவர், திருமங்கலம், அண்ணாநகர் கிழக்கு, டோல்கேட், நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங்கில் வேலை நேரங்களில் வாகனங்கள் நிறுத்தும் இடம் கிடைப்பதில்லை.  பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பயணிகள் அல்லாத வாகனங்களுக்கு விரைவில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. தற்போது பயணிகளின் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10, பயணிகள் அல்லாதவர்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் மேலும் உயர்த்தப்படலாம் எனக் கூறியுள்ளார். இந்த அறிவிப்பால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *