• Mon. Jan 20th, 2025

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு, பால பிரஜாதிபதி அடிகளார் கண்டனம்.

கிண்டி ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் (மார்ச்3)ம் நாள். அய்யா வைகுண்டரின் 192வது அவதார விழாவை கொண்டாடிய போது, ஆளுநர் ஆர்.என். ரவி வெளிப்படுத்திய கருத்து. அய்யா வைகுண்டர் ஒரு சானதான வாதி மட்டும் அல்ல மத மாற்றத்திற்கும் எதிரானவர் என தமிழக ஆளுநர் ரவி அரங்கில் கூடியிருந்தவர்கள் மத்தியில் ஆளுநரது பேச்சைக் கண்டித்து பூஜித குரு பால பிரஜாதிபதி அடிகளார் செய்தியாளர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சிற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.

அய்யா வைகுண்டரின் வரலாறு தெரியாதவர்கள், அதை பற்றி பேசக்கூடாது. சாதனத்தையும், ஆரிய கோட்பாட்டையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

சாதிய வேறுபாடுகள் இன்றி எல்லாம் ஒரே நெரப்பாக இருக்க வேண்டும் என்ற போதனையை தான் அகில திரட்டில் அய்யா போதித்துள்ளார். தாளகிடப்பவரை தற்காப்பதே தர்மம் என உறைத்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என். ரவி.அய்யா வைகுண்டர் மீது கொண்டுள்ள பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும் என பாலபிரஜாதிபதி தெரிவித்தார்.