• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ஜெஸீம்.

அதிமுகவின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியை குடும்பத்தினருடன் ஜெஸீம் நேரில் சந்தித்தார்.

குமரி அகஸ்தீசுவரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெஸீம். புரட்சி தலைவர், எடப்பாடி பழனிசாமி. இவர்களின் ஒவ்வொரு பிறந்த தினத்தை வெகு சிறப்பாக கழகத்தினருடன் கொண்டாடுவதை வாடிக்கையாக கொண்டவர் என்பதை குமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தளவாய் சுந்தரம் உட்பட அனைவராலும் பாராட்டப்பட்டவர் ஜெஸீம்.

இவ்வாண்டு கழகத்தின் பொதுசெயலாளரின் பிறந்த நாளான மே 12_ம்தேதியை மிக சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்த நிலையில், காஷ்மீரில் தீவிர வாதிகளின் ஊடுருவல் துப்பாக்கி சூட்டில் வெளி நாட்டவர்கள் உட்பட 26_ பேர் மரணம். எதிர்பாராத சூழலில், இந்தியா_ பாகிஸ்தான் போர் ஏற்பட்ட சூழலில், கழகத்தின் பொது செயலாளர் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம் என அறிவித்ததை அடுத்து, அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய பகுதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில். கழகத் தொண்டர்கள். ரத்த தானம் நிகழ்வு , கோவிலில் பிரார்த்தனை என்ற அளவில் கழகத்தின் செயலாளர், தமிழக எதிர் கட்சி தலைவரின் பிறந்த தினத்தை சிறப்பித்தனர்.

குமரி அகஸ்தீசுவரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெஸீம் அவரது குடும்பத்தினருடன் சென்னையில் கழகப் பொதுச்செயலாளர், தமிழக முன்னாள் முதல்வர்.இன்றைய தமிழக சட்டமன்ற எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து. தனது குடும்பத்துடன் சந்தித்து ஆசி பெற்றார்.

கழகத்தின் தலைவரை ஜெஸீம் குடும்பத்தினருடன் சந்தித்து ஆசி பெற்ற போது, கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரமும் உடன் இருந்தார்.