• Sat. May 11th, 2024

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு

Byவிஷா

Feb 13, 2024

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி,என்ஐடி, ஐஐஐடி ஆகியவற்றில் சேர்வதற்காக நடத்தப்பட்ட ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி ஆகியவற்றில் சேர ஜேஇஇ எனப்படும் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என 2 பிரிவுகளாக நடைபெறுகிறது.
ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என்ஐடி, ஐஐஐடி கல்வி நிறுவனங்களில் சேரலாம். அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஐஐடி கல்லூரிகளில் சேரலாம். துநுநு முதன்மை முடிவுகள் இன்று வெளியானது. ஜேஇஇ முதன்மை தேர்வில் பங்கேற்ற 11 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுகளை jeemain.nta.ac.in மற்றும் jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பார்க்கலாம்.
ஜேஇஇ மெயின் தேர்வுக்கு 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர். ஜேஇஇ முதன்மை அமர்வு 1 தேர்வு ஜனவரி 24, 27, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1, 2024 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் துநுநு முதன்மை அமர்வு 1 தேர்வுக்கு பதிவு செய்த 12,21,615 பேரில் 11,70,036 பேர் தேர்வெழுதினர். இம்முறை மொத்தம் 23 மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2-ஆம் அமர்வுக்கான நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வுகள் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *