மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் சைனிக் பள்ளிகள் பொது – தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் 70 சதவிதம் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தொடர்புடைய அமைப்புகளுக்கு ஒதுக்கீடுகள் செய்யப்பட உள்ளன. இந்த அமைப்புகள் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து கணிசமான அரசு மானியங்களைப் பெறுகின்றன.

நடுநிலையான மற்றும் மதச்சார்பற்ற நாட்டிற்கு இந்த போக்கு மிகவும் கவலையளிப்பதாகும். எனவே ஆர் எஸ் எஸ் தொடர்புடைய அமைப்புகளுக்கான ஒதுக்கீடுகளை ரத்து செய்து மத்திய அரசே பாதுகாப்பு அமைச்சகம் மூலம் நேரடியாக சைனிக் பள்ளிகளை நிர்வகிக்க திருச்சபை பணியாளர்கள் நல தொழிற்சங்கம் மாநில செயலாளர் சகோ. ஜெபசிங் வலியுறுத்தியுள்ளார்.