
விஜய் 51 வது பிறந்தநாள் விழாவில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேட்டி அளித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புவதால் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதல்வராக வருவார் என கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 51வது பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி விஜய்யின் முன்னாள் மேனேஜரும், கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி.செல்வகுமார் குமரி, நெல்லை மாவட்டங்களில் 51 ஊர்களில் 51 பெண்களுக்கு ஆடுகள், 51 பெண்களுக்கு தையல் மெஷின், 51 மாணவிகளுக்கு ஐபேட் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்கினார்.
இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது நாட்டை நல்ல பாதையில் கொண்டு செல்லும் தலைவர்கள் இல்லை. அமைதியான, வளர்ச்சியான தமிழகத்தை உருவாக்க விஜய் முதலமைச்சராக வர வேண்டும். அவர் ஆட்சிக்கு வந்தால் நேர்மையான பாதையில் நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவார்.ஜாதி, மதத்தால், மொழியால் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடித்து நல்லாட்சியை மலர வைப்பார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என பேசினார்.
முன்னதாக, ரஸ்தாகாடு, மணக்குடி, ஆரோக்கியபுரம், பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி உள்ளிட்ட 51 ஊர்களுக்கு நேரடியாக சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
