ஜெயம் ரவி ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை குலேபகவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்குகிறார். ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டது எனக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு அகிலன் என தலைப்பு வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.
தற்போது, அது உறுதி படுத்தும் வகையில், இந்த புதிய படம் பற்றிய அறிவிப்பும், பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. ஜெயம்ரவியின் 28 ஆவது படமான இந்தப்படத்திற்கு அகிலன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் போஸ்டரில் “King Of The Indian Ocean” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
