முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண அறிக்கை வரும் 29ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என தகவல்,
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி இன்று காலை தாக்கல் செய்தார். தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 29-ம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ள நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. முதல்வர், சட்டத்துறை அமைச்சரிடம் அறிக்கை தரப்பட்ட நிலையில் அமைச்சரவை கூட்டத்திலும் தாக்கல் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.