• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வெளிநாட்டுப் பயணிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் ஜப்பான் வர தடை

Byகாயத்ரி

Nov 29, 2021

உலகம் முழுவதும் ஒமிக்ரான் உருமாறிய வைரஸ் பொது மக்களை மிரட்டி வருகிறது. பல அடுக்கு உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸான ஒமிக்ரான் தென்னாப்ரிக்காவில் இருந்து பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.

இதையடுத்து பல உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கி உள்ளன. இதே போல் ஜப்பான் நாட்டிலும் ஒமிக்ரான் வைரஸ் வராமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் ஜப்பான் நாட்டுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜப்பானில் வணிகர்கள், வெளிநாட்டு மாணவர்கள், வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக இந்த மாதத் தொடக்கத்தில் திறந்துவிடப்பட்ட எல்லைப் போக்குவரத்து மீண்டும் மூடப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தென்ஆப்பிரிக்கா உள்பட 8 நாடுகளில் இருந்து ஜப்பானுக்கு வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் முதல் ஜப்பானுக்குள் நுழைய வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.