• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பா.ஜனதா பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை- கவுன்சிலர் உள்பட 9 பேர் சரண்

ByA.Tamilselvan

Apr 28, 2023

பா.ஜனதா பிரமுகர் பி.பி.ஜி.சங்கர் நேற்று இரவு நசரத்பேட்டை சிக்னல் அருகே வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக 9 பேர் சரண் அடைந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும் பா.ஜனதா எஸ்.சி.எஸ்.டி பிரிவு மாநில பொருளாளருமான பி.பி.ஜி.சங்கர் நேற்று இரவு நசரத்பேட்டை சிக்னல் அருகே வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக சென்னை எழும்பூர் 13-வது கோர்ட்டில் இன்று மதியம் 9 பேர் சரண் அடைந்தனர். அவர்களில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரும் இருப்பதாக கூறப்படுகிறது. சரண் அடைந்த 9 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.