அவதூறாக பேசி, அநாகரீக அரசியல் செய்து வரும் சீமானை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து, வேலூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜா குப்பம் முருகானந்தம் தலைமையிலான திமுகவினர், வேலூர் எஸ்பி அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:“நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக் கூட்டத்தில் பேசும்போது, தமிழக அரசையும், திமுக மற்றும் திமுக தொண்டர்களையும் மேடையிலேயே செருப்பைக் கழட்டி அடிப்பேன் என பேசியுள்ளார்.
அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது, திமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவதூறாக பேசி, அநாகரீக அரசியல் செய்து வரும் சீமானை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் தெரிவித்துள்ளனர்.