• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் பேரணி..,

ByAnandakumar

Apr 23, 2025

கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் கரூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கூட்டுத் தலைமை அன்பழகன் மற்றும் வேலுமணி தலைமையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக அவர்கள் பேரணியாக லைட் ஹவுஸ் கார்னர், ஜவகர் பஜார் வழியாக கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக பேரணி நிறைவு பெற்றது.

இதில் திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியின் படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டுக்கும் மேலாக உள்ள காலி பணியிடங்களை நிரப்பபட வேண்டும். உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அதை கண்டன கோஷம் எழுப்பி பேரணியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த திரளான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.