• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

வாத்தி ரெய்டு இல்ல நடிகர் விஜய் உறவினர் வீட்டில் ‘ஐ.டி., ரெய்டு’

நடிகர் விஜயின் உறவினரும், தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையிட்டு வருகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தை தயாரித்தவரும், நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ திரைப்படங்களில் முதலீடு தவிர மற்ற சில தொழில்களும் செய்து வருகிறார். இவர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இதனையடுத்து இன்று (டிச.,22) வருமான வரித்துறை அதிகாரிகள் இவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். சேவியர் பிரிட்டோவின் வீடு மட்டுமல்லாமல், சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள அவரது அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
சீன நிறுவனமான சியோமி, ஓப்போ நிறுவனங்களுக்கு சொந்தமான 25 இடங்களில் நேற்று முதல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. அதன் எதிரொலியாக செல்போன் நிறுவனத்தின் ஏற்றுமதி, இறக்குமதியை சேவியர் பிரிட்டோவின் நிறுவனம் கையாளுவதால் இந்த சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.