• Fri. Mar 24th, 2023

இயற்கை வளங்களை பாதுகாப்பது நம் கடமை

ByAlaguraja Palanichamy

Jul 24, 2022

உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
நம் வாழ்வில் இயற்கையின் முக்கியத்துவத்தையும், அதை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதையும் நாம் இந்த நாளில் மட்டுமல்லாமல் தினமும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இயற்கையைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நிலைத்தன்மையை (Sustainability) ஊக்குவிக்கவும் இந்த நாள் நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.


மனிதன் உள்பட உலகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் உயிர் வாழ்வதற்க்கு ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது. இவற்றுக்கு அடிப்படையான இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரின் கடமையாகும். நவினமயமாதல் என்ற பெயரில் பசுமைக்காடுகள் மரங்கள், உயிரினங்கள், விளைநிலங்கள், நீர் நிலம், காற்று, ஆகாயம் என அனைத்தும் மாசுக்களால் நிறைந்திருக்கின்றன. மாசற்ற, சுகாதாரமான உலகமைய பாடுபட வேண்டியது நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட கடமை. நீர் வளத்தையும், நில வளத்தையும் பாதுகாக்க முயல்வோம். இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும். என உலக அளவில் இயற்கை வளங்கள் அழிந்து வருகின்றன. இயற்கை வளங்களை மரபுரீதியாக பாதுகாத்து இயற்கை வளங்களோடு தங்களது வேளாண்மை பண்பாட்டை தாங்கி வாழும் வேளாண்மரபினரை போற்றி வணங்குவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *