• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ட்ரைலர்-ல்ல இருப்பது பீஸ்ட் கதை இல்லையா?

பீஸ்ட் படத்தின் எடிட்டர் நிர்மல் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், பீஸ்ட் டிரைலருக்காக 10 நாட்களாக நானும்,நெல்சன் சாரும் கடுமையாக உழைத்தோம். இந்த டிரைலருக்கு முன் கிட்டத்தட்ட 5 டிரைலர்களை எடிட் செய்தேன். ஒவ்வொரு டிரைலரிலும் ஒவ்வொரு இம்ப்ரூவ்மென்ட் இருக்கும். கடைசியாக வெளியான இந்த டிரைலர் 10வது எடிஷன் என்றார். டிரைலரை பார்த்த தளபதி கட்டிப்பிடித்து பாராட்டினார். அது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்றார்.

டிரைலரில் இருப்பது பீஸ்ட் கதையே இல்லை, நீங்கள் படத்தை பார்க்கும் போதுதான் அது உங்களுக்கு தெரியும், வழக்கமாக நெல்சன் ஒரு ட்விஸ்டை வெச்சி இருப்பாரு அது தான் படத்தின் ஹைலைட் என்றார். நெல்சன் அடுத்ததாக தலைவர் 169 திரைப்படத்தை இயக்க உள்ளார். அந்த படத்திலும் நான் தான் எடிட்டார். தலைவருடைய படத்தில் வேலை செய்வதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருப்பதாக எடிட்டர் நிர்மல் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.