தேமுதிக தலைவர் விஜயகாந்தை பொது நிகழ்ச்சிகளில் பார்க்க ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். விஜயகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு, கடந்த சில ஆண்டுகளாக முழு ஓய்வில் இருந்து வருகிறார். பொது நிகழ்ச்சிகள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. ஆனால், கட்சி அலுவலகத்திற்கு மட்டும் அவ்வப்போது அழைத்து வரப்படுகிறார்.
இந்நிலையில், விஜயகாந்தின் புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் அமைந்துள்ளது. கட்சி நிகழ்ச்சிகளில் பேசாவிட்டாலும், கண்ணாடி அணிந்து பழைய விஜயகாந்த்தாய் அமர்ந்தது தொண்டர்களுக்கு தெம்பாக இருந்தது. அனால், தற்போது உடல் மிகவும் மெலிந்து, ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போய் இருப்பது விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.