• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பிரபல நடிகைக்கு இப்படி ஒரு ஆசையா?

ByA.Tamilselvan

Oct 19, 2022

திரைத்துறையில் 17 வருடங்களான நிலைத்து நிற்கும் நடிகை தமன்னா. தற்போது இவர் அளித்துள்ள பேட்டியில் திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
தமிழில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த தமன்னா 17 வருடங்களாக சினிமாவில் நீடிக்கிறார். தற்போது அவருக்கு 32 வயது ஆவதால் திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர் என்றும், விரைவில் அவரது திருமணம் நடக்க உள்ளது என்றும் தகவல்கள் பரவின. தமன்னா இதற்கு விளக்கம் அளித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், ”எல்லாரையும் போலவே எனது பெற்றோரும் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். எனக்கும் திருமண அமைப்பின் மீது நம்பிக்கை இருக்கிறது. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், தாயாக வேண்டும் என்றும் ஆசையாக உள்ளது.

ஆனால் தற்போதைக்கு நான் எனது சொந்த வாழ்க்கைக்காக நேரத்தை ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறேன் நடிப்புத் தொழிலில் மிகவும் பிஸியாக இருக்கிறேன். பிஸி காரணமாக சில முறை எனது பெற்றோரிடம்கூட தொலைபேசியில் பேச முடியாத நிலையில் இருக்கிறேன். இப்போதைக்கு எனது சந்தோஷம் எல்லாமே சூட்டிங் லொகேஷனில்தான் இருக்கிறது. எனது தொழிலை நான் இந்த அளவிற்கு சிறப்பாக செய்வதற்கு எனது பெற்றோர் மற்றும் எனது ரசிகர்களின் ஆதரவு தான் காரணம் என்பதை மறக்க மாட்டேன்” என்றார்.